நமது உடலில் கணையம் எங்கு உள்ளது என்று கேட்டால், பலருக்கும் தெரியது ஏனென்றால் கணையம் பற்றிய விழிப்புணர்வு அந்த அளவுகு யாரிடமும் இல்லை
நமது வயிற்றுப்பகுதியில், இரைப்பைக்குக் கீழே, சிறிது பின்புறமாக, முன்சிறுகுடலுக்கு இடது பக்கமாக, மாவிலை வடிவத்தில், ஊதாவும் மஞ்சளும் கலந்த நிறத்தில், தட்டையாக ஓர் உறுப்பு இருக்கும். அதுவே ‘கணையம்’ (Pancreas)ஆகும். இதன் நீளம் அதிகபட்சமாக 20 செ.மீ. எடை 100 கிராம் வரை இருக்கும்.
இது ஒரு கலப்படச் சுரப்பி (Dual Gland). இதில் நாளமுள்ள சுரப்பிகள் உண்டு, என்சைம்கள் அடங்கிய உணவுச் செரிமான நீர்களைச் சுரக்கின்றது. இந்தச் செரிமான நீர்கள் ‘கணைய நாளம்’ வழியாக முன்சிறுகுடலுக்குச் சென்று, கொழுப்பு, புரதம், மாவுப்பொருள் ஆகிய உணவுச்சத்துகள் செரிப்பதற்கு தூண்டுகின்றன.
கணையத்தில் ‘லாங்கர்ஹான்ஸ் திட்டுகள்’ (Islets Of Langerhans) எனும் சிறப்புத் திசுக்கள் ஆங்காங்கே பரவி இருக்கும். ஆரோக்கியமாக உள்ள நபரிடம் சுமார் பத்து லட்சம் திட்டுகள் இருக்கும். ஒவ்வொரு திட்டிலும் மூன்றாயிரம் முதல் நான்காயிரம் வரை செல்கள் இருகும்.இந்த செல்கள் ஆல்பா, பீட்டா, டெல்டா என்று மூன்று வகைப்படும். இவற்றில் ‘பீட்டா’ செல்கள் இன்சுலினையும், ஆல்பா செல்கள் குளுக்ககான் ஹார்மோனையும், டெல்டா செல்கள் சொமோட்டோஸ்டேடின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
இவை ‘நாளமில்லா சுரப்பிகள்’ என்பதால், தாம் சுரக்கின்ற ஹார்மோன்களை ரத்தத்தில் நேரடியாகவே சேர்த்துவிடுகின்றன. இப்படி ஒரே நேரத்தில் இரு வேலைகளைச் செய்கிற உறுப்பு நம் உடலில் வேறு எதுவும் கிடையாது.
கணைய நீர் பணிகள் என்ன?
கணையநீர் , புரத உணவின் செரிமானத்தன்மைக்கு டிரிப்சின், கைமோடிரிப்சின், கார்பாக்சிபெப்டிடேஸ் ஆகிய 3 வித என்சைம்களை சுரக்கும். டிரிப்சின், கைமோடிரிப்சின் – இரண்டும் உணவிலுள்ள புரத மூலக்கூறுகளை உடைத்து பெப்டைடுகளாக மாற்றபடுகின்றன. இந்த பெப்டைடுகளை கார்பாக்சிபெப்டிடேஸ் உடைத்து அமினோ அமிலங்களாக மாற்றி ரத்தம் வழியாக கல்லீரலுக்கு அனுப்பிவைக்கிறது.
நீர்ச் சுரப்பில் அமிலேஸ் எனும் என்சைம்இருக்கும். இது உணவில் உள்ள ஸ்டார்ச்சை மால்ட்டோஸாக மாற்றுகிறது. லைப்பேஸ் என்சைம் கொழுப்பு உணவை கொழுப்பு அமிலமாகவும் கிளிசராலாகவும் மாற்றம் செய்கிறது. இவை அனைத்தும் குடலில் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கின்றன. இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு வரும் உணவுக்கூழில் உள்ள அமிலத்தன்மையை நீக்கி சரிசெய்ய கணையம் ‘பைகார்பனேட் அயனி’களைச் சுரந்து சிறுகுடலுக்கு அனுப்பி வைக்ப்படும். இதுபோல் கணையம் உணவு செரிமானத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது.
கணையம் பாதிக்கப்படுவது ஏன்?
ஒரு சில குழந்தை களுக்கு – காக்காக்ஸி, மஞ்சள் காமாலை, அம்மைக்கட்டு, ருபெல்லா முதலிய வைரஸ்களில் ஏதாவது ஒன்று கணையத்தை நேரடியாகத் தாக்கும்போது, பீட்டா செல்கள் முழுவதுமாக அழிந்துபோவதால், அப்போது இன்சுலின் சுரப்பு அறவே இல்லாமல் போய்விடும். இதன் காரணமாக, அவர்களுக்கு டைப் 1 சர்க்கரை நோய் வருகிறது.
நமது உலில் நோய்கள் வரும்போது, அந்த நோய்களிலிருந்து நம்மைக் காப்பதற்காக, ஒரு தற்காத்து கொள்ள ஒரு படை நம் உடலில் இருக்கிறது. இது உடலுக்குத் துன்பம் தரும் எதிரிகளை கண்டு, ‘எதிர் அணுக்கள்’ (Antibodies) வீரர்களை அனுப்பி, அந்த எதிரிகளை அழித்து, நம்மைப் பாதுகாக்கும். சில வேளைகளில், கணையத் திசுக்களில் உண்டாகிற ஏதேனும் ஒரு பாதிப்புக்காக இவ்வாறு எதிர் அணுக்கள் உண்டாகும்போது, அவை தவறுதலாக கணையத்தில் உள்ள பீட்டா செல்களையும் எதிரிகளாக நினைத்து தாக்க தொடங்கும். இதனால், பீட்டா செல்கள் அழிந்து போகின்றன; அப்போதும் உடலில் இன்சுலின் அறவே இல்லாமல் போகிறது.
இதனாலும் டைப் 1 சர்க்கரை நோய் வருகிறது. பலருக்கு பருமன், இன்சுலின் எதிர்ப்புத் தன்மை, பரம்பரை போன்ற காரணங்களால் டைப் 2 சர்க்கரை நோய் வருகிறது. இவர்களுக்கு இன்சுலின் குறைந்த அளவில் சுரக்கிறது அல்லது சுரக்கின்ற இன்சுலின் சரிவர வேலை செய்யாமல் இருக்கிறது. இதுதான் டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்குக் காரணம்.
கணையத்தை அழிக்கும் சுரப்பி
கணையத்தில் சுரக்கும் செரிமான நீர்கள் மிகவும் கடுமையானவை. தங்கள் இயல்பை மீறி கணையத்தில் இவை தங்குமானால், கணையத்தையே அழித்துவிடும். கணையம் மிகவும் சாதுவானது பல நேரங்களில் சாதுவாக இருக்கிற கணையம் திடீரென்று எதிர்மறையாக மாறிவிடும்.
எனவே இச்சுரப்பு நீர்கள் கணையத்திலிருந்து உடனுக்குடன் முன்சிறுகுடலுக்குச் சென்று விட வேண்டும். இல்லையென்றால், கணையத்துக்கே அது ஆபத்தைவிளைவிக்கும். கணையம் சில காரணங்களால் திடீரென்றோ, நாள்பட்டோ பாதிக்கப்படும். அப்போது கணையம் வீங்கிவிடும். பிறகு அழுகிவிடும். இறுதியாக கணையத்தில் ரத்தப்போக்கு ஏற்படும். இந்த நிலைமையைக் `கணைய அழற்சி’ (Pancreatitis) ஆகும். இவை இரண்டு முக்கியமான காரணங்களால் ஏற்படுகிறது.
அதிகப் படியாக மது அருந்துவதுபித்தப்பையில் கற்கள் (Gall stones ) இருந்தால் இது உண்டாகும்.அதிக மான மதுபழக்கம்
தொடர்ந்து மது அருந்துபவர்களுக்குக் கணையக்குழாயில் ஒருவகை புரதப்பொருள் படிந்து காலப்போக்கில் அந்தக் குழாயை அடைத்துவிடும்.அப்போது கணையத்தில் சுரக்கும் செரிமான நீர்கள் அங்கேயே தங்கி, கணையத்தின் செல்களை அழிக்கத்தொடங்கும். இதனால் `கணைய அழற்சி’ உண்டாகும். பிறகு , மது புரோட்டியேஸ், லைப்பேஸ், அமைலேஸ் ஆகிய என்சைம்களின் உற்பத்தியைக் அதிகரிக்கிறது. அதேநேரத்தில் ‘ட்ரிப்சின்’ எனும் என்சைம் சுரப்பைக் குறைக்கும். இதன் காரணமாகவும் கணையத்தில் அழற்சி உண்டாகும்.. இது பெரும்பாலும் ஆண்களுக்கே வருகிறது. 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகமாகும்.
பித்தப்பை கற்கள்;
நமது பித்தப்பையில் கற்கள் உருவாகி பித்தக்குழாயை அடைத்துவிட்டால், பித்தநீர் மற்றும் கணைய நீர்கள் முன்சிறுகுடலுக்குள் செல்ல முடியாமல், திர்ம்பவும் கணையத்திற்கே திரும்பிஅணுப்பும். அதன் விளைவாக இந்த நீர்கள் கணையத்தின் செல்களை அரித்துவிடுவதால், கணையத்தில் அழற்சி உண்டாகும்.
இயற்கை வாழ்வியலில் முதலில் உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்றி இயற்கை உணவுகளை அதாவது சமைக்காத உணவுகளை ஒருவேளை எடுத்துக்கொள்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை இல்லாமல் நாம் விரும்பிய இனிப்பு , அசைவம் போன்ற உணவுகளை உண்டு நோயில்லாமல் வாழ நல்வழி(Goodways) அமைப்பு வரவேற்கிறது
வாழ்க்கையில் ஒருமுறை நல்வழிக்கு வந்தால் என்றும் ஆரோக்கியம், ஆனந்தம், அன்புடன் வாழலாம்
இயற்கை வாழ்வியலுக்கு
மாறுவோம்- இனி
மருந்து மாத்திரை
இன்றி இவ்வுலகில்
இருக்கும் காலம் வரை
இனிமையாக வாழ்வோம்!
நல்வழி(Goodways)
Whatsapp
7094511769 ..,
49, Sydenhams Rd, Park Town, Chennai, Tamil Nadu 600003, இந்தியா
Related ads
கரும்படை மங்கு நீக்கும் மருந்து முகம் பொலிவடையும் பயன்படுத்தி பாருங்கள்
கரும்படை மங்கு நீக்கும் மருந்து முகம் பொலிவடையும் பயன்படுத்தி பாருங்கள் கரும்படை(மங்கு) நீக்கும் மருந்து பெண்களுக்கு ஏற்படும் மிக பெரிய பிரச்சினை கண்ணங்களில் ஏற்படும் கரும்படை இதை எளிதாக மூலிகைகளால் தீர்க்கமுடியும் 15 மூலிகைகள் கொண்டு… சென்னை
வசியம் அல்லது ஈடு மருந்து முறிவு மருத்துவம் | இடு மருந்து முறிய
வசியம் அல்லது ஈடு மருந்து முறிவு இடு மருந்து முறிய மருத்துவம் கிடைக்கும் ரூபாய் 4000/-மட்டும் 9787727029 சென்னை
இதயத்தில் ஏற்படும் இரத்த குழாய் அடைப்பு neekkapadum
இரத்த குழாய் அடைப்பு உடனடியாக சரி செய்யப்படும் விலை 4000/- 9787727029 சென்னை
முழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை
முழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை ஒரு மனிதன் முழுமையான வாழ்கையை வாழ மூன்று முக்கிய அம்சங்கள் தேவை. பணம், ஆரோக்கியம், அன்பு ஆகியவைதான் அவை. இதனை அடைய நீங்கள் வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஆழ்மன எண்ணங்களை சீர்படுத்துதல். இதனை மிக எளிமையாக ஹிப்னாடிச கலை… சென்னை
ஜெயந்த் அக்குபங்சர் சிகிச்சை மையம் - பெருங்குடி
சென்னையின் / தென் இந்தியாவின் - ஒரே அங்கீகரிக்கப்பட்ட ஷு (Zhu's Scalp) ஸ்கேல்ப் அக்குபங்சர் மருத்துவரால் சிகிச்சை வழங்கப்படுகிறது. குழந்தையின்மை, ஒற்றைத்தலைவலி, தூக்கமின்மை, நரம்பியல் தொடர்பான உடற் கோளாறுகள் மற்றும் அனைதுவிதமானவைகளுக்கும் சிகிச்சை… சென்னை