வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்
admin
25-10-18
19.10.2018 வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்
சென்னை : வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலிருந்து திரும்ப வழங்கும் நிலை வரை https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
19.10.2018 முதல் இணையதளத்தில் உருவாக்கப்பட்ட ஆவணங்களின் நிலை அறிய ”ஆவணத்தின் நிலை” என்ற தெரிவை தேர்வு செய்து தங்களின் தற்காலிக ஆவண எண்ணையோ அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் முழுமையான எண்ணையோ அல்லது நிலுவை ஆவண எண்ணையோ அளித்தால் அந்த ஆவணத்தின் மீது எடுக்கப்பட்ட முழு நடவடிக்கைகளும் திரையில் தோன்றும்.