சென்னையில் ஊர் சந்தை நிகழ்வு களம் இயற்கை சந்தை வரும் 15 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை சாந்தோமில் இருக்கும் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது. வேளாண் விவசாயிகள் மற்றும் சிறுகுறு வணிகர்களின் ஒன்று கூடல் தான் இந்த ஊர் சந்தை. இந்த சந்தையில், மளிகைப்பொருள்கள் தொடங்கி, வீட்டுக்குத்தேவையான அனைத்துவிதமான உபயோகப்பொருள்களும் கிடைக்கும். மேலும், பல்வேறு தமிழர் பாரம்பரிய கலை நிகழ்வுகளும், கலை பயிற்சிகளும், பானை செய்தல் பயிற்சியும் நடைபெறும்.
மறக்கப்பட்ட நமது ஊர் சந்தைகளின் மீட்டெடுப்பு மற்றும் சிறுதொழில் செய்யும் நமது தோழர்களின் தரமான பொருள்களின் விற்பனை மையம் தான் இந்த ஊர் சந்தை.
கடந்த இருமுறை நமது நிகழ்வுக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், இந்த முறை கூடுதல் ஸ்டால்களுடன், இன்னும் பெரிய இடத்தில் நிகழ்வினை நடத்துகிறோம். இயற்கை சார்ந்த சிறுதானிய உணவுப் பொருள்களை கடந்த இரு நிகழ்வுகளை விட இன்னும் அதிக அளவில் திரட்ட முயற்சி செய்திருக்கிறோம். எனவே, உங்களிடம் இருந்து இன்னும் கூடுதலான வரவேற்பை எதிர்பார்க்கிறோம். குடும்பத்தோடு வந்து, தரமானப் பொருள்களை வாங்கிச் செல்லுங்கள்
Related ads
உங்கள் தொழிலை பிரபலப்படுத்த
உங்கள் தொழிலை பிரபலப்படுத்த சிறந்த முறையில் வீடியோக்கள் செய்து தருகிறோம் உங்கள் தொழிலை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்ல பல்வேறு வீடியோ மார்கெட்டிங் யுக்திகளுடன் வீடியோ செய்து தருகிறோம். பேஸ்புக் மற்றும் யூடியூப் பிரபலப்படுத்தும் வகையில் செய்து… சென்னை
வணிகத்தில் வெற்றி சிறந்த தொழில்முனைவராக விளங்குவது எப்படி
தமிழர்கள் தங்களுடைய வணிகத்தில் தற்பொழுதிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்து வணிகத்தில் வெற்றி பெற்று சிறந்த தொழில்முனைவராக விளங்குவது எப்படி என்பதை பற்றி தமிழர் பரிந்துரை வணிகம் அமைப்பை சேர்ந்த வணிகர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.… சென்னை
தமிழக தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள்
தமிழக தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள் தமிழக அளவிலான தொழில் முனைவோர்களுக்கான சாதனையாளர் விருதுகள் - 2019 தனக்கான வாய்ப்பை தேடாமல், தானே உருவாக்கி தானும் பயனடைந்து மற்றவர்களுக்கும் தொழில் வாய்ப்பை உருவாக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்கள்… சென்னை
உங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்
உங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும் தெளிவான முயற்சியும் அதற்குண்டான பயிற்சியும் இருந்தால் , நாம் நிற்க கூட இடம் இல்லாத மேடையில் நடனமே ஆடலாம் உங்கள் வியாபாரத்தில் சிகரத்தை எட்டும் முயற்சியும் பயிற்சியும்,,, உங்களுக்காக ....… சென்னை
சென்னை வானகரத்தில் தொழிற்பயிற்சி
சென்னை வானகரத்தில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி கூடத்தின் மூலமாக சீஷா தொண்டு நிறுவனம் டெக் மஹிந்திரா பவுண்டேஷனுடன் இணைந்து ஆட்டோமொபைல் துறையில் நான்கு சக்கர தொழில்நுட்ப பயிற்சியையும், ஓட்டுநர் பயிற்சியையும் (LMV) இலவசமாக வழங்குகிறது. ஆர்வமுள்ள 18 முதல் 35… சென்னை