வாஸ்து விதிகளின் அடிப்படையில் வாஸ்து ரீதியான ஆண்–பெண் மனைகள்
வாஸ்து விதிகளின் அடிப்படையில் வாஸ்து ரீதியான ஆண்–பெண் மனைகள்
வீடு அல்லது மனை யாருடைய பெயரில் உள்ளது என்பதை பொறுத்து அதன் வாஸ்து ரீதியான பலன்கள் மற்றும் தன்மைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அவை பற்றிய கூடுதல் தகவல்களை இங்கே காணலாம். வாஸ்து விதிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீடு அல்லது மனை உரிமையாளர் ஆணாக இருக்கும் நிலையில் ஒருவித பலன்களும். பெண்ணாக இருக்கும் நிலையில் வேறுவித பலன்களும் ஏற்படுவதாக வாஸ்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
வாஸ்து ரீதியான ஆண்–பெண் மனைகள்
பொதுவாக, மனை அமைப்பிலேயே ஆண் மனை என்றும் பெண் மனை என்றும் இரு வகைகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அதாவது, ஒரு மனை கிழக்கு–மேற்கில் அதிக நீளம் கொண்ட செவ்வக மனையாக இருந்தால் அது ஆண் மனையாகவும், வடக்கு–தெற்காக அதிக நீளம் கொண்டதாக இருந்தால் அது பெண் மனையாகவும் குறிப்பிடப்படுகிறது. நான்கு பக்கமும் ஒரே அளவு கொண்ட சதுர வடிவ மனை சமநிலை கொண்டதாக அமைகிறது.
திசைகளின் சிறப்புகள்
மேலும், பெண்களின் சிறப்பை வடக்கு. தெற்கு திசைகளும், வாயு மூலையாகிய வடமேற்கு பகுதியும் எடுத்துக்காட்டுகின்றன. ஆண்களின் சிறப்பை கிழக்கு, மேற்கு திசைகளும், அக்னி மூலை எனும் தென்கிழக்கு பகுதியும் வெளிப்படுத்துகின்றன. வீடு அல்லது மனை தேர்வில் இவற்றை கவனித்துக்கொள்வது அவசியம்.
கிழக்கு–மேற்கு சாலைகள்
ஒரு மனை அல்லது வீட்டுக்கு கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் சாலைகள் அமைந்துள்ள மனைகளை ஆண்கள் பெயரில் இருப்பது பல நன்மைகளை அளிப்பதாகும். அப்படிப்பட்ட வீட்டில் இரண்டாவது மற்றும் நான்காவது வாரிசுகள் ஆண்களாக இருக்கும்பட்சத்தில் பல நன்மமைகளை அளிக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது. அதன் அடிப்படையில் பெண்களுக்கு இவ்வகை அமைப்பு கொண்ட மனை அல்லது வீடுகள் சிறப்புகளை அளிப்பதில்லை.
வடக்கு–தெற்கு சாலைகள்
ஒரு மனை அல்லது வீட்டுக்கு வடக்கு மற்றும் தெற்கு திசையில் சாலைகள் அமைந்திருப்பது பெண்களுக்கு பல விதமான சிறப்புகளை அளிக்கக்கூடியது என்ற நிலையில் அவர்கள் பெயரில் இருப்பது நல்லது. குறிப்பாக, அப்படிப்பட்ட வீட்டில் முதலாவது மற்றும் மூன்றாவது வாரிசாக பெண்கள் இருக்கும் பட்சத்தில் பல சிறப்புகளை அளிக்கும். அதன் அடிப்படையில் ஆண்களுக்கு இவ்வகை மனை அல்லது வீடு நன்மைகளை தருவதில்லை.
நைருதி–ஈசானிய மனைகள்
தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் சாலை அமைப்பு அதாவது நைருதி மனையாக உள்ள இடம் அல்லது வீடு ஆண்களுக்கு நன்மைகளை அளிக்கும். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் சாலை அமைப்பு அதாவது ஈசானிய மனையாக உள்ள இடம் அல்லது வீடு ஆண்கள் பெயரில் இருப்பது அதிர்ஷ்டத்தை அளிக்கும். மேற்கண்ட இரு அமைப்பு கொண்ட வீடு–இடங்கள் பெண்களுக்கு ஏற்றதாக அமைவதில்லை.
வாயவிய மனைகள்
வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் சாலை அமைப்பு அதாவது வாயவிய மனையாக அமைந்த இடம் அல்லது வீடு பெண்கள் பெயரில் இருப்பது அவர்களுக்கு பல நன்மைகளை அளிக்கும். அதன் அடிப்படையில் வாயவிய மனை அமைப்பானது ஆண்களுக்கு நல்ல பலன்களை அளிப்பதில்லை.