சென்னை Chennaiseller
01-07-18 871 ஹிட்ஸ்


மலைப் பூண்டு விற்பனை மொத்தமாக கிடைக்கும் | பூண்டு வியாபாரம் மலை வெள்ளை பூண்டு
பூண்டு என்றவுடன் மூக்கை பிடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு அற்புதமான மருந்துபொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. பொதுவாக அமர்ந்தபடி அலுவல் புரியும் பலருக்கு ஏற்படும் பெரும் தொல்லை, வாயு தொல்லை. அதற்கு அற்புதமான மருந்து பூண்டு. மருத்துவரிடம் சென்று அவர் தரும் பூண்டு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு பதிலாக உணவில் பூண்டை சேர்த்து கொள்வது பல வகைகளிலும் நல்லது.

இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. இதில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன். அவற்றினை காண்போம்.

மருத்துவ குணங்கள்:

இது ஒரு சிறந்த கிருமி நாசினி.
வியற்வையை பெருக்கும்,
உடற்சக்தியை அதிகப்படுத்தும்,
தாய்பாலை விருத்தி செய்யும்,
சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும்,
சீரண சக்தியை அபிவிருத்தி செய்யும்,
இரத்த கொதிப்பை தணிக்கும்.
உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
இதய அடைப்பை நீக்கும்.
நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும்.
ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு.
பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.
தொண்டை சதையை நீக்கும்.
மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும்.
பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது.
சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.
மூட்டு வலியைப் போக்கும்.
வாயுப் பிடிப்பை நீக்கும்.
இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது
உபயோகிக்கும் முறை:

தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

உள்நாக்கு வளர்தலுக்கு: வெள்ளை பூண்டை இஞ்சி சாறுவிட்டு அரைத்து கொஞ்சம் தேனும் கலந்து காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன் இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வரவும். இவ்விழுதை தொண்டையின் வெளிப் பூசி வர வேண்டும். இப்படி செய்தால் மூன்றே நாளில் குணமாகும்.

சுளுக்கு : வெள்ளை பூண்டை உப்பு சேர்த்து இடித்து,சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு நீங்கி விரடும்.

தேமல் : வெள்ளை பூண்டையும் வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமலின் மீது தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக தேமல் மங்கி கொண்டே வந்து கடைசியில் மறைந்துவிடும்.

இரத்த அழுத்ததிற்கு: இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும்.

இளம் தாய்மார்கள், பூண்டை பாலில் வேக வைத்து சாப்பிட அதிகமான பால் சுரக்கும்.

அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.

மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும்.

நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்.

இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும்.

கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்.

ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.

குறிப்பு:பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இந்த பூண்டை உண்பதால் ஒருவித வாடை ஏற்படுகிறது. இதனாலேயே பலர் பூண்டை உணவுடன் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கின்றனர். இதை தவிர்க்க பூண்டு பற்களை, வெங்காய துண்டுகள், இஞ்சியுடன் இளம் சூட்டில் வறுத்து உண்ணலாம். தவிர, பூண்டு உணவு அல்லது பூண்டை உட்கொண்ட பிறகு கொத்தமல்லி, லவங்கம் அல்லது கிராம்பு போன்றவற்றை வாயில் ஒதுக்கி கொண்டால் பூண்டினால் உண்டாகும் ஒரு விதமான வாடையை தவிர்க்கலாம்.

ஆனால் பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

சந்தையில் கிடைக்கும் சாதா பூண்டுகளை காட்டிலும் மலைப் பூண்டு மருத்துவ குணம் மிக்கது.உங்கள் டுடே மார்ட் கொடைக்கானல் மலையில் இருந்து விவசாயிகளிடம் நேரடியாக நல்ல தரமான பருவட்டான காய்ச்சலான மலைப் பூண்டுகளை பெற்று சந்தை படுத்துகிறோம்.

*மலைப் பூண்டு - ரூபாய்.160 / கிலோ*

தொடர்புக்கு - 95 85 75 09 90


  செய்தி அனுப்பு


Related ads

சில நொடிகளில் தொடர்ந்து வெந்நீர் மின்சார செலவு குறைவு

சில நொடிகளில் தொடர்ந்து வெந்நீர் மின்சார செலவு குறைவு  எங்கள் நிருவனத்திற்கு ஆதரவு அளிக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. சில நொடிகளில் தொடர்ந்து வெந்நீர் மின்சார செலவு குறைவு. 2599/- மதிப்புள்ள Automatic reset model 2000 /- மட்டும்.… சென்னை

தமிழகத்திலேயே மிக குறைந்த விலையில் GPS Vehicle Tracking

தமிழகத்திலேயே மிக குறைந்த விலையில் GPS Vehicle Tracking ஐ இந்திய மென்பொருளை (Indian Software ) கொண்டு நாங்கள் வழங்குகிறோம். We deeplimit are dedicated to offer you complete fleet management & real time tracking solutions. Either you are an individual… சென்னை

LED BULB தயாரிப்பு தொழில் வாய்ப்பு | இல்லங்களுக்கே வந்து பயிற்சி வழங்கப்படும்

தமிழ்நாடு முழுவதும்  LED BULB தயாரிப்பு தொழில் வாய்ப்பு | இல்லங்களுக்கே வந்து பயிற்சி வழங்கப்படும்  வீட்டிலிருந்தபடியே புதிய தொழில் வாய்ப்பு... குறைந்த முதலீட்டில் அதிக வருமான வாய்ப்பு... மூலப்பொருட்களை நாங்களே கொடுத்து நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை… சென்னை

தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையா?

தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையா? உங்களுக்காகவே ஒரு வாய்ப்பு! உங்களுக்காகவே ஒரு வாய்ப்பு!  தகுதி:- முறையாக நேரம் ஒதுக்கி அதில் நேர்மையான உழைப்பை தருபவர் மட்டுமே. கல்விதகுதி? அனுபவகல்வி போதுமானது. வயது வரம்பு 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், 18 வயதுக்கு… சென்னை

காட்டு தேக்கு மரங்களை கொண்டு இப்போது தரமான பர்னிச்சர் செய்து தருகிறேன்.

 இந்த தீபாவளிக்கு தேக்கு பர்னிச்சர் என்று வாங்குபவர்கள் இதை கவனிக்கவும் படித்து விட்டு வாங்குங்கள். விலை குறைவாக தருகிறோம் என்று சொன்னவுடன் நீங்களும் வாங்கிரீங்க. அது தேக்கு மரம் தான் என்று எப்படி உங்களுக்கு தெரியும். இப்போது பல்வேறு பலவகையான மரங்களன… சென்னை

Report this ad