சென்னையில் ஊர் சந்தை நிகழ்வு களம் இயற்கை சந்தை வரும் 15 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை சாந்தோமில் இருக்கும் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது. வேளாண் விவசாயிகள் மற்றும் சிறுகுறு வணிகர்களின் ஒன்று கூடல் தான் இந்த ஊர் சந்தை. இந்த சந்தையில், மளிகைப்பொருள்கள் தொடங்கி, வீட்டுக்குத்தேவையான அனைத்துவிதமான உபயோகப்பொருள்களும் கிடைக்கும். மேலும், பல்வேறு தமிழர் பாரம்பரிய கலை நிகழ்வுகளும், கலை பயிற்சிகளும், பானை செய்தல் பயிற்சியும் நடைபெறும். மறக்கப்பட்ட நமது ஊர் சந்தைகளின் மீட்டெடுப்பு மற்றும் சிறுதொழில் செய்யும் நமது தோழர்களின் தரமான பொருள்களின் விற்பனை மையம் தான் இந்த ஊர் சந்தை. கடந்த இருமுறை நமது நிகழ்வுக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், இந்த முறை கூடுதல் ஸ்டால்களுடன், இன்னும் பெரிய இடத்தில் நிகழ்வினை நடத்துகிறோம். இயற்கை சார்ந்த சிறுதானிய உணவுப் பொருள்களை கடந்த இரு நிகழ்வுகளை விட இன்னும் அதிக அளவில் திரட்ட முயற்சி செய்திருக்கிறோம். எனவே, உங்களிடம் இருந்து இன்னும் கூடுதலான வரவேற்பை எதிர்பார்க்கிறோம். குடும்பத்தோடு வந்து, தரமானப் பொருள்களை வாங்கிச் செல்லுங்கள்
>https://www.facebook.com/Kalam.kaanbom/