நாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும், கரும்புச்சாற்றை பாகு போல காய்ச்சும் போது அவை குறிப்பிட்ட கொதிநிலை வந்தவுடன் அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அதை வைத்து அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கிறார்கள். இக்கரும்பு சர்க்கரையில் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய நிறைய சத்துக்கள் உள்ளன. 1), நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 2), நாம் உண்ணும் உணவுகளில் நாட்டு சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் நம்முடைய ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி சுத்தமாக்குகிறது. 3), நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். 4), நாட்டு சர்க்கரையை பயன்படுத்துவதால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும். 5), நாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும், இந்த நாட்டு சர்க்கரையை டீ, காபி, பழச்சாறுகளில் கலந்து குடிக்கலாம் மற்றும் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, பிரட் போன்றவற்றில் கலந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.
Kavindapadi, Erode Dt