மூட்டுவலியை குணமாக்கும் கருடன்கிழங்கு வாதநோய் குணமாகும் ➯ வாதநோய் குணமாகும் ➩ சருமநோய்களை குணமாக்கும் தைலம் தயாரிக்கவும் பயன்படுகிறது ➩ தேள் கொட்டினால் ஆகாச கருடன் கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்றால் தேள் விஷம் இறங்கும். இதில் உயிர்ச்சத்து அதிகம் உள்ளது எனினும் மனிதர்கள் உண்ணப்பயன்படுவதில்லை. கிராமப்புறத்தில் பெரும்பாலான வீடுகளின் முற்றத்தில் இரண்டு பொருட்கள் கட்டாயமாக கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். ஒன்று 'சோற்றுக்கற்றாழை' மற்றொன்று 'கருடன்கிழங்கு'. சோற்றுக்கற்றாழையை பற்றி அடுத்த கட்டுரையில் சொல்கிறேன். இப்பொழுது கருடன்கிழங்கு பற்றி பார்ப்போம். கருடன்கிழங்கு வழக்கமான கிழக்குகளை போல், மண்ணுக்குள் வளரும் தன்மை, இதற்கு கிடையாது; காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, கொடிகளில் படர்ந்து வளரக்கூடியது. இது, மாதக்கணக்கில் காய்ந்து போகாமல் இருக்கும் தன்மை கொண்டது.எல்லா பகுதிகளிலும், ஆகாச கருடன் கிழங்கை காண்பது அரிது; மிதவெப்பம் நிலவக்கூடிய மலைப்பகுதிகளில் அரிதாக காணப்படும். கருடன்கிழங்கு விஷ ஜந்துகளின் கடிக்கு மருந்தாக, சிலர் பயன்படுத்துகின்றனர். இக்கிழங்குள்ள பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. இது கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்தது. கருடன் கிழங்கு பற்றி சித்தர்கள் பாடியது ' அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை கரையாத கட்டியிவை கானார்- வரையிற் றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு கருடன் கிழங்கதனைக் கண்டு'. – சித்தர் பாடல். மாந்திரீகதில் கருடன்கிழங்கு கேரளாவில் சிலர் இதை மாந்திரீகதிற்காகவும் பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும். (மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும் என்பது சிலரது நம்பிக்கை ). கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம் என்று சொல்வார்கள். மூட்டுவலியை குணமாக்கும் கருடன்கிழங்கு மூன்று கைப்பிடியளவு ஆகாச கருடன் கிழங்கு இலையைக் பொடியாக நறுக்கி வைத்துக்கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, தேக்கரண்டியளவு விளக்கெண்ணையை விட்டு, எண்ணெய் காய்ந்தவுடன், இலையைப் போட்டு, பதமாக வதக்க வேண்டும். அதை சுத்தமாக துணியில் சிறிய மூட்டை போலக் கட்டி, தாங்குமளவு சூட்டுடன் கை, கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால நல்ல நிவாரணம் கிடைக்கும். ➯ வாதநோய் குணமாகும் ➩ சருமநோய்களை குணமாக்கும் தைலம் தயாரிக்கவும் பயன்படுகிறது ➩ தேள் கொட்டினால் ஆகாச கருடன் கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்றால் தேள் விஷம் இறங்கும். இதில் உயிர்ச்சத்து அதிகம் உள்ளது எனினும் மனிதர்கள் உண்ணப்பயன்படுவதில்லை. 9944052055