பிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது

பிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள்  தயார் செய்யப்படுகிறது தமிழ்நாட்டில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி வாலாஜா. சென்னையிலிருந்து வெள்ளையர் அரசு ஏற்படுத்திய முதல் தொடர்வண்டி வழித்தடம் வாலாஜா இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற வாலாஜாபேட்டையில், 400 ஆண்டுகளுக்கு மேலாக, பிரம்பு நாற்காலி தயார் செய்யும் தொழில் நடந்து வருகிறது. இதற்காக, தஞ்சாவூர், அசாம், அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து பிரம்புகளை வாங்கி வந்து, வளைத்து, நெளித்து, அழகிய பிரம்பு நாற்காலிகள், உணவு அருந்தும் மேஜைகள், கூடைகள், அலமாரிகள், சாய்வு நாற்காலிகள், சோபாசெட், குழந்தைகளுக்கான நாற்காலிகள் , பூஜைக்கூடை, பழ கூடை, அலங்காரகூடை, தட்டு, பொம்மை என, 50க்கும் மேற்பட்ட பொருள்கள் பல வண்ணங்களில் இங்கு தயார் செய்யப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகள் முன்பு ஆற்காடு நவாப்களின் தேவைக்காக பிரம்பின் மூலம் அறைகலன்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு வாலாஜா பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. போலீசார் பயன்படுத்தும் லத்திகள், பாதுகாப்பு தடுப்புகள் ஆகியவை, இங்கிருந்து தான் தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கிருந்து பொருட்களை வாங்கிச் செல்வது மட்டுமல்ல, தேவைகேற்ப ஆர்டர் கொடுத்து செய்துவாங்கிக் கொள்ளவும் முடியும். அவர்களிடம் இருக்கும் டிசைன் மட்டுமல்ல, உங்களது விருப்ப டிசைன்களும் செய்துகொள்ளலாம். பிரம்பினால் தயாரிக்கப்படும் ஊஞ்சல், நாற்காலிகளைப் பயன்படுத்தும்போது, அவை உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு, முதுகுவலிக்கு நிவாரணியாகவும் இருக்கிறது. மருத்துவ குணம் வாய்ந்த பிரம்பு மூங்கில் வகை பொருட்கள் உடல் ரீதியாக ஏற்படும் நோய்களை தடுக்கும் சக்தி கொண்டது. கடந்த சில ஆண்டுகளாக, பிரம்பு நாற்காலிகள் விற்பனை குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இவர்கள் வாலாஜாபேட்டை - வேலூர் மெயின் சாலையில், வரிசையாக கடைகள் வைத்திருந்தனர். சென்னையில் இருந்து பெங்களூரு, சேலம் மார்க்கமாக செல்பவர்கள், இந்த வழியாக செல்லும் போது, பிரம்பால் தயார் செய்த பொருட்களை வாங்கிச் சென்றனர். தற்போது, பைபாஸ் சாலை வந்து விட்டதால், சென்னை - பெங்களூரு சாலையில் செல்பவர்கள், வாலாஜாபேட்டைக்கு வராமலேயே சென்று விடுகின்றனர். இதனால் பிரம்பு பொருட்கள் விற்பனை வெகுவாக குறைந்து விட்டது. இதனால், இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த பாதி பேர், வேறு வேலைக்கு சென்று விட்டனர். தமிழக பண்பாடு கலாசாரத்தைப் பறைசாற்றும் பாரம்பரிய தொழிலான பிரம்பு தொழிலை பாதுகாப்போம் நம்மால் முடிந்தவரை. Free Shipping within Tamil Nadu வாலாஜாபேட்டை பிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் - Walajapet Cane and Bamboo Products Cell : 91768 66225 Contact me for further details through comment or messenger

walaja


View full page