தொழில் கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

தொழில் கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ரூ.25 இலட்சம் வரை தொழில் தொடங்க கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP-Prime Minister’s Employment Generation Programme) October 29, 2014 TAMIL ENTREPRENEUR Funding loan தொழில் தொடங்க நிறைய முதலீடு (Capital) தேவைப்படுகின்றன. தொழில் துவங்கும் எண்ணம் கொண்ட நிறைய பேர் தொழிலுக்குத் தேவையான பண முதலீடு (Investment) தங்களிடம் இல்லாததால் தங்கள் கனவுகளை பாதியிலேயே கைவிடுகின்றனர். தொழில்முனைவோர் தொழில்களை தொடங்குவதற்கான முதலீட்டை (Capital) பெற பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP-Prime Minister’s Employment Generation Programme) உதவுகிறது. தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான நிதியுதவியை பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP-Prime Minister’s Employment Generation Programme) மூலம் பெறலாம். இத்திட்டமானது Prime Minister’s Rojgar Yojana (PMRY) மற்றும் Rural Employment Generation Programme (REGP) ஆகிய இரண்டையும் இணைத்து, 2008 ஆகஸ்டு ஆண்டு 15ம் தேதியன்று உருவாக்கப்பட்டது. நோக்கம் (Objective) : நாட்டில் தொழில் நிறுவனங்கள் அதிகம் இருந்தால்தான் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கும். தொழில் நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) முக்கிய நோக்கம் (To generate employment opportunities in rural as well as urban areas of the country through setting up of new self employment ventures/projects/micro enterprises). பாரம்பரிய தொழில்முனைவோர், கிராமப்புற/ நகர்ப்புறங்களில் வசிக்கும் வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்து, முடிந்த வரை அவர்களது இடத்திலேயே சுய வேலைவாய்ப்பை உருவாக்கி தருதல். பாரம்பரிய தொழில்முனைவோர்களின் வருமானம் ஈட்டும் திறமையை உயர்த்துவதன் மூலம், கிராமப்புற, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கச் செய்தல் கிராமப்புற, நகர்ப்புற, பாரம்பரிய தொழில்முனைவோருக்கு தொடர்ந்து, நிரந்தரமாக வேலை வழங்குவதன் மூலம், வேலை இல்லா இளைஞர்கள், நகர்புறங்களுக்கு செல்வதை தடுக்க முடியும். Customer care number:8072336915. கடன் உதவி தேவைப்படும் நண்பர்கள் உங்கள் பெயர் மற்றும் whatsapp எண்ணை பதிவு செய்யவும்


View full page