சுயதொழில் புரியும் தனிநபர்களுக்கு கடன்

சுயதொழில் புரியும் தனிநபர்களுக்கு கடன் விண்ணப்பிப்பதற்கு நீங்கள் கொண்டிருக்க வேண்டிய தகைமை சிறிய அல்லது நடுத்தர அளவிலான வர்த்தகம் ஒன்றின் உரிமையாளராக, பங்காளராக அல்லது பணிப்பாளராக அதனை நடாத்தி வருவதுடன், 3 வருடங்களுக்கும் மேலாக அதில் ஈடுபட்டுள்ளதுடன், குறைந்தபட்ச மாதாந்த இலாபமாக ரூபா 50,000/= இனை ஈட்டுகின்ற, 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். எமக்குத் தேவைப்படும் ஆவணங்கள். முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட தனிநபர் கடன் விண்ணப்பம் தேசிய அடையாள அட்டையின் பிரதி வதிவிட முகவரியை உறுதிப்படுத்துவதற்காக சமீபத்தைய பயன்பாட்டுக் கட்டணப் பட்டியல்/வங்கிக் கூற்றின் பிரதி வியாபாரக் கூட்டிணைப்புச் சான்றிதழ். கடைசி 6 மாதங்களுக்கான வங்கிக் கூற்றின் பிரதிகள் – வர்த்தக மற்றும் தனிப்பட்ட. கடைசி 2 வருடங்களுக்கான வரிக் கொடுப்பனவு ரசீதின் பிரதிகள். படிவம் 48, வரையறுக்கப்பட்ட பொறுப்பு கொண்ட நிறுவனங்களாக இருப்பின் நிறுவன நோக்கு மற்றும் வரையறை பத்திரங்கள் அடுத்தது என்ன? உங்களுடைய இலட்சியத்தை நிறைவேற்றி உங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்யும் இலகுவான வழிக்கு நாம் உதவக் காத்திருக்கின்றோம். ஆகவே இப்போதே விண்ணப்பியுங்கள், எம்மை அழையுங்கள் அல்லது எம்முடன் உரையாடுங்கள்


View full page